
முதல் 35 ஓவர் வரை இலங்கை அணியே ஆதிக்கம் செலுத்தியது. விக்கெட் விழுந்தபோது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டோம். கடைசி நேரத்தில் ஜாகீர்கான் நெக்ரா சிறப்பாக பந்து வீசினார்கள்.
இந்தப் போட்டியில் நான் அதிகமாக பதட்டம் அடைந்தேன். 400 ரன்னுக்கு மேல் எடுத்து கிட்டத்தட்ட தோல்வியை நெருங்கியதால் மிகவும் பதட்டம் ஆனேன். இந்த நேரத்தில் அமைதியாக பணியாற்றுவது என்பது கடினமே. இவ்வாறு டோனி கூறினார்.
இந்திய வீரர்களின் பீல்டிங் கவலையளிக்கும் வகையில் உள்ளது. 3 கேட்சுகளை தவற விட்டனர். தரங்கா 10 ரன்னில் இருந்த போது கோலியும், சங்ககரா 56 ரன்னில் இருந்த போது ஹர்பஜனும், தில்சான் 114 ரன்னில் இருந்த போது காம்பீரும் கேட்சை தவற விட்டனர்.
ஆனால் கடைசி நேரத்தில் பீல்டிங் சிறப்பாக இருந்தது. தெண்டுல்கர், ரெய்னாவின் திறமையான பீல்டிங்கினால் 49-வது ஓவரில் இலங்கை வீரர்கள் கண்டாம்பி, சமரவீரா ரன் அவுட் ஆனார்கள்
இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2-வது போட்டி வருகிற 18-ந் தேதி நாக்பூரில் நடக்கிறது.
No comments:
Post a Comment