Thursday 25 March 2010


வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில் உண்டு என்பதைப் போல் மத்திய ஆசியாவின் மாபெரும் வல்லரசான சீன அரசுக்கு சரியான நோஸ் கட் கொடுத்துள்ளது கூகுள் நிறுவனம்.

அமெரிக்காவை தலைமையமாகக் கொண்ட கூகிள் நிறுவனத்தின் தேடல் சேவைதான் உலகத்தில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சர்ச் என்ஜின். இதன் மூலம் எங்கோ ஒரு நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் தெருவைக்கூட துல்லியமாக காட்ட முடிகின்ற அளவுக்கு கூகிளின் ஆக்டோபஸ் கைகள் வளர்ந்துள்ளது.

தன்னுடைய எதிரியில் நிழல்கூட தனது நாட்டின் மீது படக்கூடாது என்பதில் மிக மிக எச்சரிக்கையாக இருந்து வரும் சீன தேசம் கூகுளின் இந்த சேவையை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தது.

கூகுளில் தட்டச்சு செய்தால் நொடியில் கேட்ட தகவல்களைக் கொட்டி விடுகின்ற ஆற்றலுக்கு சீனம் சிவப்புக் கம்பள விரிப்பு விரிக்காமல் கம்பளி போர்வையைப் போட்டு தடை விதித்தது.

`கூகுள் அனுப்பும் எந்த தகவல்களையும் தங்களது நாட்டிற்குள் தணிக்கை செய்துதான், இன்டர்நெட்டில் பார்க்க அனுப்புவோம்` என்று சீனாவின் செஞ்சேனை அரசு விதித்த கட்டுப்பாட்டை வன்மையாக எதிர்த்தது கூகிள்.

 `இது, தகவல் சுதந்திரத்தை பறிக்கும் போக்கு; இதை அனுமதிக்கமுடியாது` என்று கூகுள் நிறுவனம் கூறியது. தணிக்கை செய்யாமல், சீனாவில் இருந்து கூகுள் தன் இன்டர்நெட் சேவையை சீன மக்களுக்கு அளிக்க முடியாது என்று சீனா  மிரட்டி வந்ததோடு இல்லாமல் அதனை செயல்படுத்தியும் வந்தது. சீனாவில் இருந்து கூகுள் தகவல்கள் எல்லாம் தணிக்கை செய்வதும், இருட்டடிப்பு செய்வதும் தொடர்ந்ததை, கூகுளும் கவனித்துதான் வந்தது.
 சீனா கம்யூனிஸ்ட் ஆட்சியின் நிலைமை.. சீன தேசம் பற்றிய தகவல்கள், தைவானுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை, சீன பொருளாதார தடைகள், சீன கரன்சியான `யான்` மதிப்பு நிலைமை, திபெத் தலைவர் தலாய்லாமாவின் பேச்சுகள் போன்றவற்றை அவ்வப்போது கூகுள் மூலம் பல வெப்சைட்கள் வெளியிடுவதை, சீனா விரும்பவில்லை.

கம்யூனிச கட்டுப்பாட்டை மீறிய தகவல்களை அது தணிக்கை செய்ய ஆரம்பித்தது. இதையடுத்துதான், கூகுள் - சீன கம்யூனிச அரசு சண்டை ஆரம்பமானது. இந்த சச்சரவின்போது சீனத் தலைநகர் பீகிங்கில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் வெளிதேசத்தவர்கள் பலரையும் கண்காணிக்க ஆரம்பித்தது சீன அரசு. இந்த ஒற்றுவேலையையும் புரிந்து கொண்ட கூகுள் இதற்காகவும் சீனாவைக் கண்டித்தது. ஆனால் அசுர பலம் கொண்ட அரசு என்பதால் வேறு வழியில்லாமல் பீஜிங்கில் இருந்த தனது அலுவலகத்தில் வேலை பார்த்த ஊழியர்களின் எண்ணிக்கை குறைத்துக் கொண்டது.

இரு தரப்பினருக்கும் முட்டல், மோதல்கள் அதிகரித்தபோது வழக்கம்போல அமெரிக்க அரசு இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அமெரிக்க அரசு ராஜ்ஜிய ரீதியாக தலையிடும் சூழல் வந்தால் அப்போது நிச்சயம் தலையிடும் என்று சொல்லி விலகிக் கொண்டு வேடிக்கை பார்த்தது.
ஆனாலும் கூகிளுக்கு இது அறிவுசார் சொத்துரிமையின் மீது சீன அரசு தொடுத்துள்ள அடக்குமுறை என்பதாகத் தெரிய வர.. இது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும், முடியாமல் போய் சமீபத்தில் இரு தரப்பு உறவுகளும் முற்றிலுமாக முறிந்துவிட்டன.
தணிக்கையை எந்த வடிவிலும் ஏற்க முடியாது என்று கூகுள் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. ஆனாலும் சீன அரசு அதனைப் பொருட்படுத்தாமல் தனது தணிக்கை முறையைக் கையாண்டதைக் கண்டு பொறுமை இழந்த கூகுள், நேற்று திடீரென சீனாவில் இருந்து கூகுள் தேடல் சேவையை நிறுத்திவிட்டது.
`சீனாவில் உள்ள மக்கள் எங்கள் சேவையை பெற விரும்பினால், தணிக்கை செய்யப்படாத தகவல்களை பெற, ஹாங்காங் சேவை மூலம் பெறலாம்` என்று அறிவித்து உள்ளது.

இனிமேல் சீனா பற்றிய தகவல்களை, படங்களை பெற, சீனாவில் உள்ளவர்கள், www.google.com.hk  என்று இன்டர்நெட்டில் முகவரியிட்டு பெறலாம்.
இந்தத் திடீர் திருப்பத்தால் ஆடிப் போயிருக்கும் சீனா, கூகுள் நிறுவனத்தின் மீது கடும் கோபம் கொண்டுள்ளது. `அமெரிக்காவை அடுத்து சீனாவில்தான் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர்; நாங்கள் கூகுளுக்கு சரியான பாடம் கற்பிப்போம்` என்று சீனா கோபத்துடன் உள்ளது..
`நாங்கள் தகவல் சுதந்திரத்தை பறிக்கத் தயாரில்லை; உலகில் உள்ள மக்களுக்கு எல்லா தகவல்களும் போக வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்` என்கிறார் கூகுள் நிறுவனத்தின் சட்ட அதிகாரி டேவிட் ட்ரூம்மாண்ட்.

`கூகுளுக்கும், சீன அரசுக்குமான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது; இணையதள சுதந்திரத்துக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கிறது; தணிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கப்படும் என்று கருதவில்லை` என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் மைக் ஹேம்மர் கூறியிருக்கிறார்.

ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட அரசுபோல் காட்சியளிக்கும் சீனாவின் கம்யூனியஸ ஆட்சியாளர்களை எதிர்த்து கூகுள் நடத்தியிருக்கும் இந்த யுத்தத்தில் வெற்றி யாருக்கு..? தோல்வி யாருக்கு..? என்பதையெல்லாம் யோசிக்க முடியாத அளவுக்கு இந்தப் பிரச்சினை வலுத்துக் கொண்டே போயுள்ளது.
ஹாங்காக்கும் சீன அரசுக்குட்பட்ட பிரதேசம்தான் என்றாலும் பல்வேறு நாட்டு மக்களும் இருக்கின்ற பகுதி என்பதால் இப்போதும் கம்யூனிஸம் முழுமையாக அங்கே நிறுவப்படவில்லை. இதனாலேயே கூகுள் ஹாங்காக்கை இப்போதைக்கு தேர்வு செய்திருக்கிறது.

ஒருவேளை சீன அரசுக்கு கூகுள் சீனாவின் ஆளுமைக்குள்ளேயே புரட்சிகர சிந்தனையோடு இருப்பது பிடிக்காது போனால் வேறு ஏதாவது ஒரு காரணத்தோடு ஹாங்காக்கை விட்டு கூகுளை துரத்திவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும்.

அதுவரையிலும் தற்காலிகமாக வெற்றி பெற்ற திருப்தியில் கூகுள் நிறுவனம்