Sunday 11 April 2010



யூ ட்யூபின் புதிய வடிவம்






பீட்டா வெர்சனுக்கு மாறிய இரண்டு மாதத்தில் யூ ட்யூப் வீடியோ தளத்தின்
புதிய வடிவம்  முழுமையாக பார்வைக்குத் தயாராகியுள்ளது. ஜனவரியின்
பிற்பகுதியிலே புதியவடிவத்துக்கு மாறத் தொடங்கி இருந்த இந்த வீடியோ
பகிர்தல் தளமானது தற்போது சீரான வடிவத்தில் பயனாளர்கள் பயன்படுத்த
முன்வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு வருடமாக தயாரிக்கப்பட்ட இந்த புதியவடிவமானது இரண்டு நோக்கங்களை
பூர்த்திசெய்வதாக இருக்கிறது. முதலாவது, ’முன்னெப்போதும் விட
நுட்பமனதும், தேவையற்ற பகுதிகள் நீக்கப்பட்டதுமான பயனர் செயல்பாட்டின்
எளிமை’.  இரண்டாவது, தளத்திற்கு வருகை புரிபவர்களின் நீடித்த
பயன்பாடுக்கு இது உத்திரவாதம் அளிக்கக்கூடியது மற்றும் அவர்களை யூ ட்யூபை
விட்டு  பிரியவிடாது செய்யக்கூடியது என்பது யாஹூ தளத்தின் வடிவமைப்பாளர்
ஜூலியன்  ஃப்ரூமர் மற்றும் மென்பொருளாளர் இகோர் கோஃப்மன் இருவரின்
கருத்தாகும்.

புதிய யூட்யூப் மாற்றங்கள் புதிய பயனாளர்களுக்கு மட்டுமல்லாமல் தொடர்ந்த
திறமையான பயனாளர்களுக்கும் ஏற்றதாகும். மாற்றங்கள் வெளிப்படையாக
முதல்பார்வையில் தெரியாவிட்டாலும் பயன்படுத்தும்போது அதன் சிறப்பு
தெரியவரும்.

பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியின்  தகவல்கள் ஒரே இடமாக வீடியோ
பகுதிக்கு கீழாகக் காண்பிக்கப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு
அம்புக்குறியை சுட்டுவதனால் அறிந்துகொள்ளலாம்.


முறைப்படுத்தப்பட்ட தேடுதல்
--------------------------------------------
தொடர்புடைய காட்சிகளின் வரிசை வலது புறத்தில் தற்போது
நுட்பமாக்கப்பட்டிருக்கிறது,அதாவது அந்த காட்சிக்கு வந்து சேர்ந்த
விதத்தை தொடர்புபடுத்தியதாக அமைகிறது. தேடுதல் முறை மூலம் அந்த
காட்சிக்கு வந்திருக்கும் பட்சத்தில் அது மற்ற தேடல் வரிசைகளை காட்டுவதாக
இருக்கும். அல்லது பரிந்துரை மற்றும் ப்ளேலிஸ்ட் மூலமாக வந்திருக்கும்
பட்சத்தில் அவை போன்றவற்றையும் காட்டுவதாக இருக்கும்.

மேலும் ஒரு வீடியோவின் பயன்பாட்டுக்கு நடுவிலும் கூட தேடுதலை
தொடரமுடியும்.ஒரே நேரட்த்தில் மேலும் செயல்பட விழைபவர்களுக்கு இது
சிறப்பானது. தேடுதலுக்கான விடைகள் வீடியோவிற்கு இடர்பாடு இல்லாமல்
வலதுபுறத்தில் காண்பிக்கப்படும்.


புதிய ரேட்டிங்க் முறை
---------------------------------
ஐந்து நட்சத்திர குறியீடுகள் போன்ற முறைகள் தற்போது இல்லை. பயனாளர்கள்
‘1’ அல்லது ‘5’ என்பதை மட்டுமே பிடித்தது பிடிக்கவில்லை என தெரியப்படுத்த
தேர்ந்தெடுத்து வந்ததால் இந்த புதிய முறையில் இரண்டே இரண்டு
வாய்ப்புக்கள் தரப்பட்டிருக்கிறது. விரும்புகிறேன் அல்லது விரும்பவில்லை
என்பதை தேர்ந்தெடுக்கலாம்.விரும்புகிறேன் என்று  தேர்ந்தெடுக்கும் வீடியோ
விருப்பப்பட்டியலில் இணைந்து விடும்.

சந்தா செய்துகொள்வதற்கான  பகுதியும்  வீடியோவின் மேல்பகுதியில்
பார்வைக்கு எளிதாக இருப்பதால் சந்தா எளிதாகவும் மற்ற வீடியோக்களை
அடுத்தடுத்து பார்க்க ஏதுவாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.